சிம்பலான பள்ளிபாளையம் சிக்கன் செய்யலாமா..!
சிக்கன் – 1/4 கிலோ எலும்பில்லாதது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் – 10
கறிவேப்பிலை
தேங்காய் – 1 கப் மெல்லியதாக நறுக்கியது
சின்ன வெங்காயம் – 25 நறுக்கியது
தனியா தூள் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
சிக்கனை சுத்தம் செய்து உப்பு,மஞ்சள்தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் தேங்காய் மெல்லியதாக நறுக்கியது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின் அதில் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வதக்கி பின் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் தனியாத்தூள் சேர்த்து கிளறி தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
அவ்வளவுதான் சிம்பலான ஆனாலும் சுவை மிகுந்த பள்ளிபாளையம் சிக்கன் தயார்.