முட்டை பணியாரம்..! காலை உணவு..!
முட்டை 4
வெங்காயம் 1 நறுக்கியது
தக்காளி 1 பழம் நறுக்கியது
கேரட் 1 நறுக்கியது
முட்டைகோஸ் 1 கப் நறுக்கியது
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி இலை நறுக்கியது
மஞ்சள்தூள் கால் ஸ்பூன்
உப்பு தேவையானது
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக அடித்து கலந்துக் கொள்ள வேண்டும்.
பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி மறுபக்கம் வேக வைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான முட்டை பணியாரம் தயார்.