சத்தான காராமணி கறி..!
தேவையான பொருட்கள் :
சிவப்பு காராமணி – 1 கப் (250 மிலி)
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
முழு மசாலா (இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய்)
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
தக்காளி விழுது
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகப் பொடி – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 1/2 தேக்கரண்டி
ஆம்சூர் பொடி – 1 தேக்கரண்டி
தண்ணீர்
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
கொத்துமல்லி இலை
செய்முறை:
காராமணியை குறைந்தது 8 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.
ஒரு குக்கரில் ஊறவைத்த காராமணி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும்வரை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம்.முழு மசாலா, பெருஞ்சீரகம்,வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது,பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் தக்காளி விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும்,உப்பு,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,ஆம்சூர் பொடி சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்தும் வதங்கியதும் வேகவைத்த காராமணியை நீருடன் சேர்த்து மேலும் கரம் மசாலாவை சேர்த்து மூடி சிறிது கொதிக்க வைக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.
அவ்வளவுதான் சத்தான காராமணி கறி தயார். இது சப்பாத்தி,தோசை,இட்லி,பூரி மற்றும் சாதத்திற்கும் சாப்பிடலாம்.