ருசியான முட்டை லவாப்தார் செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
முட்டை – 6
தக்காளி – 4 நறுக்கியது
முந்திரி பருப்பு – 20
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
பிரியாணி இலை
பட்டை, ஏலக்காய், கிராம்பு
சீரகம் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகதூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கப்
பச்சை மிளகாய் – 4 கீறியது
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
கசூரி மேத்தி
கொத்தமல்லி இலை
செய்முறை:
முதலில் முந்திரியை நீரில் ஊறவைக்க வேண்டும்.
பின் அதனை ஒரு மிக்ஸியில் போட்டு அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை,பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி அதில் தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.
பின் அதில் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,சீரகத்தூள்,மல்லித்தூள்,உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் பச்சை மிளகாய்,கரம் மசாலாதூள்,சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின் கசூரி மேத்தி சேர்த்து கலக்கவும்.
முட்டையை உடைத்து அந்த கலவையில் ஊற்றி அப்படியே 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான முட்டை லவாப்தார் தயார்.
இதனை சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.