மெத்து மெத்துனு ஜவ்வரிசி இட்லி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
நைலான் ஜவ்வரிசி – 1/2 கப்
எண்ணெய் – 4 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
இஞ்சி
பச்சை மிளகாய் – 1
தேங்காய்
கறிவேப்பிலை
வெங்காயம் – 1 நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி
ரவை – 1 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
தயிர் – 1 கப்
தண்ணீர்
செய்முறை:
நைலான் ஜவ்வரிசி அரை கப் எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து நீர் ஊற்றி எட்டு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கடுகு பொரித்துக் கொள்ள வேண்டும்.
உடைத்த முந்திரி சேர்த்து லேசாக வறுத்து பின் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய தேங்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் லேசாக வதக்கி பின் உப்பு, ஒரு கப் ரவா சேர்த்து கிளற வேண்டும்.
ரவா நன்றாக வறுபட்டதும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் ஊறவைத்த ஜவ்வரிசி மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளற வேண்டும்.
பின் இதில் ஒரு கப் தயிர், கால் கப் நீர் சேர்த்து நன்றாக கிளறி இதனை அப்படியே அரை மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து இட்லி மாவை பார்த்து தேவைப்பட்டால் நீர் சேர்த்து இட்லி ஊற்றும் பதத்திற்கு தயாரிக்கவும்.
இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி இட்லி அனைத்தும் ஊற்றி 20 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும்.
அவ்வளவுதான் நல்லா மெத்து மெத்துனு ஜவ்வரிசி இட்லி தயார்.