உடனே செய்யும் “ஓட்ஸ்” தோசை…! காலை உணவு..!
ஓட்ஸ் – 1 கப்
அரிசி மாவு – ¼ கப்
கோதுமை மாவு – ¼ கப்
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
இஞ்சி – 1 தேக்கரண்டி நறுக்கியது
சீரகம் – 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு ஏற்ப
தண்ணீர் – தேவைக்கேற்ப
- ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகம், மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி, ஓட்ஸ் தோசை மாவில் ஒரு கரண்டி எடுத்து தோசைக்கல்லில் வட்டவடிவில் ஊற்றி சிறிது எண்ணெய் தடவி விட்டு சிறிது நேரம் மிதமான தீயில் வைத்திருந்து பின் எடுத்திடலாம்.
- இப்போது ஓட்ஸ் தோசை தயார். இதனுடன் தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி, சாம்பார் என அனைத்திற்கும் சாப்பிடுவதற்கு இந்த தோசை அருமையாக இருக்கும்.