‘சுதர்சன சக்ரம்’ என்று இந்திய ராணுவத்தால் அழைக்கப்படும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு எஸ் 400 ஆகும். இது ரஷ்ய, இஸ்ரேலிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களின் கலவையாக உருவாக்கப்பட்டது.
2018-ஆம் ஆண்டில், ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை அமைப்புகளில் ஐந்தை இந்தியா5.43 பில்லியன் டாலர்கள் மதிப்பில் வாங்கியது.
S-400 என்பது ஒரு நகரும் வான் பாதுகாப்பு அமைப்பு, அதாவது சாலை வழியாக கொண்டு செல்ல முடியும். உத்தரவிடப்பட்ட 5 முதல் 10 நிமிடங்களுக்குள் இதைப் பயன்படுத்தி விட முடியும். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது, அந்த நாட்டின் அனைத்து ஏவுகணைகளையும் எஸ் – 400 வான் பாதுகாப்பு அமைப்பு தகர்த்து எறிந்தது.
S-500 tவான் பாதுகாப்பு அமைப்பு பாலியஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை இடைமறித்து அழிக்க வல்லது. இது தொடர்பாக ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசவ் கூறுகையில், எஸ். 500 வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால், அது முதல் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால், விரைவில் எஸ் 500 இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது.