இடியமின்னின் அடுத்த அப்டேட்..!! எந்த மாவட்டத்திற்கு மழை தெரியுமா..?
இன்று முதல் இன்னும் 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என “வானிலை ஆய்வு மையம்” தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாட்டு காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர், ஊட்டி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் என அறிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..