சாந்தினியின் கிளாமர் போஸ்ட் பார்க்க ஆவல் காட்டும் ரசிகர்கள்..!!
சித்து 2 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். தமிழை தாண்டி இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பதற்காக, சமூகவலைத்தளத்தில் பிரபலமாக இருக்க வேண்டும் என்று நன்றாக தெரிந்து கொண்ட நடிகைகள் சொந்த செலவில் போட்டோ ஷூட் செய்து முகநூல், எக்ஸ் தளம் , இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பதிவிட்டு, இதன் மூலம் படவாய்ப்பை தேடி வருகின்றனர்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாந்தினி தமிழரசன் சில நாட்களுக்கு முன்பு நீல நிற புடவையில் இருக்கும் போட்டோக்களை பதிவிட்ருந்தார். அதற்கு லைக்குள் குவிந்த நிலையில், தற்போது மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சாந்தினி தமிழரசனா இது எனவும், உங்க அழகுக்கு அளவே இல்ல என்றும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.சாந்தினி தமிழரசன் நடிகர் எஸ்.ஜே. சூர்யா உடன் சேர்ந்து பொம்மை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் கடந்த ஜூன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை 9 ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். டான்ஸ் மாஸ்டர் நந்தா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதா என்ற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். மேலும், சில சீரியல்களிலும் நடித்துவருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீதான காதல் குறையாததால், சாந்தினி தொடர்ந்து நடித்து வருகிறார்.
Discussion about this post