கலைஞர் கருதாளுமை விருதை பெற்ற தி.மு.க எம்.எல்.ஏ..!
முத்தமிழரிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் சென்னை மாநிலக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் கலைஞர் கருத்தாளுமை விருது வழங்கும் விழா சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது .
இதில் சென்னை மாநிலக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட கலைஞர் கருதாளுமை விருதை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் முத்தமிழரிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் , வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
-பவானி கார்த்திக்