சுவையான பிரட் உப்புமா ரெசிபி..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
தேவையான பொருட்கள்:
- பிரட் 3
- என்ணெய் 1 ஸ்பூன்
- முந்திரி 10
- வேர்கடலை 2 ஸ்பூன்
- கடுகு 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் 1 நறுக்கியது
- கறிவேப்பிலை சிறிது
- பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
- வெங்காயம் 1 நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
- தக்காளி 1
- மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
- உப்பு தேவையானது
- மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
- சர்க்கரை 1/2 ஸ்பூன்
- தண்ணீர்
- கொத்தமல்லி இலை சிறிது
- எலுமிச்சை சாறு சிறிது
செய்முறை:
- ஒரு ஃபேனில் பிரட் துண்டுகளை வைத்து லேசாக வறுத்து அதனை தனியே சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- அதே ஃபேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் முந்திரி மற்றும் வேர்கடலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் எண்ணெயில் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்தது நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
- தக்காளியை நறுக்கிய பின்பு அதையும் சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்தது மிளகாய்த்தூள், சர்க்கரை சேர்த்து வதக்க வேண்டும்.
- மசாலாவில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் வறுத்த முந்திரி பருப்பு, வேர்கடலை பருப்பு மற்றும் பிரட் தூண்டுகளை போட்டு கலந்து விடவும்.
- பிரட்டில் மசாலா நன்றாக கலந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி விடவும்.
- பின் சிறிது எலுமிச்சை சாறு கலந்து இறக்க வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான பிரட் உப்புமா தயார்.