தேசிய அளவிலான டேக்வொண்டோ போட்டி..!! சென்னை வீராங்கனை வெற்றி..!!
தேசிய அளவில் மஹாராஷ்டிராவில் நடைபெற்ற டேக்வொண்டோ போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு 7 கோல்டு மெடல், 2 சில்வர் மெடல், 3 பிரான்ஸ் மெடல் என தமிழ்நாட்டிற்காக மெடல்களை குவித்து வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மகாராஷ்டிரா, நாசிக்கில் இந்தியன் டேக்வொண்டோ சார்பில் தேசிய அளவிலான தற்காப்பு போட்டி நடைபெற்றுது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்துக் கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இதில் தமிழ்நாடு சார்பில் சென்னை OMR சாலை துரைப்பாக்கத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு டேக்வொண்டோ அகாடெமி பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சியாளர் உதயகுமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழு சென்றுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்ற சென்னை துரைப்பக்கத்தை சேர்ந்த டேக்வொண்டோ வீரர் வீராங்கனைகள் 7 கோல்டு மெடல், 2 சில்வர் மெடல், 3 பிரான்ஸ் மெடல் என தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை பெற்றுள்ளனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் இதற்கு முன்னதாக பெங்களூரில் நடைபெற்ற தகுதி போட்டியில் கோல்டு மெடல் பெற்றவர்கள் மட்டுமே இந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைகள் அடுத்து கொரியா, ஹாங்காங் போன்ற நாடுகளில் நடைபெறவுள்ள ஜூனியர் அளவிலான போட்டியில் இந்தியாவிற்காக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது பெருமையாக உள்ளது என்றும் பயிற்சியாளர் உதயகுமார் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு அரசு டேக்வொண்டோ தற்காப்பு கலைக்கு அதிகவும் ஊக்கம் தருவதாகவும், முழு ஆதரவு தருவதும் தான் எங்கள் வெற்றிக்கு காரணம் என்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..