குறைகளை குறை முன்னேறி சென்றிடு..!! குட்டி ஸ்டோரி-47
ஒரு திறைமை வாய்ந்த ஓவியர் ஒருவர். ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் ஓவியம் வரைந்து கொண்டு இருப்பர். ஆனால் ஒரு நாள் கூட அவருக்கான அங்கீகாரம் கிடைத்ததே இல்லை. ஓவியம் வரைந்து விற்பதற்கு சென்றாலும் கூட யாரும் வாங்க முன்வரவில்லை.
இதனால் அவர் வருத்தத்துடன் வீட்டிற்கு திரும்புவார். அவருடைய மனைவி நீங்க ஏன் தினமும் சும்ம போயிட்டு வரிங்க, உங்களலா இந்த வீட்டுக்கு ஒரு பயனும் இல்லை வேற வேலைக்கு போக சொன்னாலும், போகமாட்டிங்க. இந்த வேலை தான் எனக்கு சந்தோசம் தருகிறது அப்படினு சொல்லிட்டு இருக்குறீங்க.
நம்ம குழந்தைகளும் வளந்துட்டாங்க., அவங்கள ஒரு நல்ல இடத்துல கால்யாணாம் பண்ணி கொடுக்கணும் அதுக்கு பணம் வேணும், நான் மட்டும் சம்பாதிக்கிறா காசு வீட்டு செலவுக்கு போதுமானதாக இல்ல இதுல நம்ம பொண்ணுங்கள என்ன செய்ய போறிங்கனு..? தினமும் அவருடைய மனைவி கத்திட்டே இருப்பாங்க.
இது எல்லாத்தையும் காதுலையே வங்கிக்காம அவரு ஓவியம் வரைய ஆரம்பிச்சிருவாரு. இரவு பொழுதும் ஆனாது. சாப்பிட்டு விட்டு படுப்பதற்கு சென்றுவிட்டார். அன்று அவருக்கு தூக்கமே வரவில்லை நானும் தினமும் என்னுடைய உழைப்பை தவறாமல் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால் ஒருநாள் கூட பலன் இல்லை பேசாமல் வேற வேலைக்கு சென்றுவிடலாம் என்று முடிவு எடுத்தார், மறுநாள் விடிந்தது ஓவியம் வரையாமல் நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அவருடைய மனைவிக்கு ஒரே ஆச்சரியம்.
என்ன இவரு விடிந்ததும் அந்த பெயிண்ட் ப்ரெஷ் எடுத்து இருப்பாரு இன்றைக்கு அந்த வேலைய பண்ணாம தீவிரம யோசிச்சிட்டு இருக்காரே என்னவா இருக்கும் அப்படினு மனசுக்குள்ள சொல்லிவிட்டு அவங்க வேலைக்கு கிளம்பிட்டாங்க.
அவரு அன்று முழுவதும் ஓவியம் வரையாமல் இருந்தார், சாயங்கால ஆனாது அவருடைய சின்ன வயசு சிநேகிதர் ஒருவர் இவரை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்தார், இருவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தனர்.
வீடு முழுவதும் ஓவியம் வரைந்து வைத்திருக்கிரையே என்று சொன்னதும் அவருடைய சோக கதையே நண்பரிடம் கூறினார். சரி கவலை படாத டா அப்படினு சொல்லிட்டு ஓவியங்களை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தார்.
கடைசியில் இந்த ஓவியங்களில் எல்லாம் சின்ன சின்ன குறைகள் தான் இருக்கிறது. அதை சரி பண்ணி கொண்டு செல் என்று கண்டிப்பா அனைவரையும் கவரும் ஓவியமாக இருக்கு என்று கூறினார்.
அவரும் குறைகளை சரி செய்து விற்பதற்கு சென்றார் ஓவியங்கள் அனைவரும் விற்று தீர்ந்தது. சந்தோஷத்தில் அவருடைய நண்பரிடம் நன்றி கூறினார். தன்னிடம் இருக்கும் குறைகளை மற்றவர்கள் கூறும்பொழுது அதை சரி செய்து கொள்ளுவதால் நமக்குத்தான் நன்மை வகிக்கும்.
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..