அரசு பியூன் வேலைக்கு 4வது படித்திருந்தால் போதுமா..!!
தற்போது எல்லாம் அரசியலில்., இருப்பவர்கள் பொது அறிவுடன் மட்டுமின்றி படிப்பிலும் அதிகம் படித்தவர்களாக இருப்பவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் ஒரு காலக்கட்டத்தில் சட்டசபையில், எம்எல்ஏ ஹாஸ்டலில் படிப்பறிவில்லாதவரக்ள் பியூனாக வேலை பார்த்து வந்துள்ளார்கள். அப்படி இருந்தவர்களுக்கு சட்டசபை உறுப்பினர்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி ஏதும் தெரியவில்லை.. அதாவது வெறுமனே கும்பிட்டு, கை கட்டி வாய் பொத்தி நிற்பதோடு சரி. சட்டசபை மூத்த அலுவலர்களை பக்குவமாக வணங்கி செல்வதில்லை” என பல குற்றசாட்டுகள் அவர்கள் மீது தெரியவில்லை என சொல்லலாம்..
அப்போது தமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்தார்.. அப்போது அவரிடம் உறுப்பினர்கள் இதை பற்றி முறையிட காமராஜர் சொன்ன பதில்,
குறைந்த பட்ச படிப்பு அரசு பணிக்கு மிக அவசியமான ஒன்று அதாவது, இனி எட்டாவது வரை படித்திருந்தால் மட்டுமே பியூன் ஆக இருக்க முடியும். குறிப்பிட்ட காலம் வரை வாய்ப்பு கொடுத்து, தேறமுடியாதவர்கள் இனி தொடர்ந்து பணியாற்ற முடியாது என ஒரு அரசாணை வெளியிட்டது..
அப்போது எம்எல்ஏ ஹாஸ்டலில் சிங்காரம் என்ற ஒரு பியூன், முதியவர் இருந்தார் அவர் நான்காவது வரை தான் படித்திருந்தார். இதை கேட்ட அந்த முதியவர் மூக்கையா தேவர் எம் எல் ஏ-விடம் போய் இந்த வயதில் என்னால் இதற்குமேல் படிங்க முடியாது. அவ்வளவு தான் என் தகுதி முடிந்து விட்டது, எனக்கோ நான்கு பெண் குழந்தைகள் இருக்கின்றனர் அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும் என்ன என்று கேட்டார்..
மூக்கையா தேவர் “பரவாயில்லை, நமது முதலமைச்சரதான் உனக்கு தெரியுமே.. யார் வேண்டுமானாலும் அணுகலாம் என்று தானே எம்எல்ஏ ஹாஸ்டலில் ஒரு போன் நம்பர் எழுதி வைத்திருக்கிறார்…
போன் செய்து உன் குறைகளை சொல். ஒரு ஐஏஎஸ் ஆபீஸர் போன் எடுப்பார், கண்டிப்பாக உன் விஷயத்தை முதலமைச்சரிடம் கூறி விடுவார்” என்று கூறினார்.
சிங்காரம் மன தைரியத்தை திரட்டி, வாளகத்தில் வைத்திருந்த பொது தொலைபேசியை எடுத்தார்..
“ஐயா நான் சிங்காரம் பேசுறேன்”
எதிர்முனையில் “சிங்காரம் என்றால்..? யாரப்பா நீ” என்று பதில் கேள்வி..
” எம்எல்ஏ ஹாஸ்டலில் பியூனாக வேலை செய்கிறேனுங்க”
” என்னப்பா வேணும்”
“என்னங்கய்யா, இதுபோல படிக்காதவர்கள் எல்லாம் திடீரென வேலையை விட்டு போகச் சொன்னால் நாங்க எங்கே போறது?”
” ஏன்? எடுத்தா என்ன? அரசுக்கு அந்த அதிகாரம் இல்லையா” என்று திருப்பி கேள்வி.
சிங்காரம் விடாமல் “ஐயா நான் தெரியாமல் கேட்கிறேன், நம்ப ஐயா, முதலமைச்சரே நாலாவது, ஐந்தாவது தான் படித்திருக்கிறார். அவருக்கு பியூனாக இருக்கும் மற்றவர் மட்டும் எட்டாவது படித்து இருக்கணும் என்று சொன்னால் எப்படி சரியாகும்”
“நீ எங்கிருந்து பேசுகிறாய்”
சிங்காரம்”நான் எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்து பேசுகிறேன்”
“சரி போன வை” என்று பதில்.
அடுத்த 15 நிமிடங்களில் ஒரு ஜீப் வந்தது..
“முதலமைச்சர் உன்னை கூப்பிடுகிறார்” என்று இவரை கூட்டிக் கொண்டு சென்றார்கள். இவருக்கு வெலவெலத்து விட்டது….
ஏனென்றால் போன் அட்டென்ட் செய்ததே காமராஜர்தான்!
முதலமைச்சர் காமராஜர் அறைக்கு சென்றால் அங்கே காமராஜர், சட்டசபை செயலர், தலைமை செயலர், சபாநாயகர் அனைவரும் இருந்தார்கள்.
காமராஜர் இவரை சோபாவில் உட்கார சொன்னார் தயங்கி அமர்ந்த சிங்காரத்திடம் “போன்ல என்னப்பா சொன்ன” என்று கேட்டார்.
சிங்காரம் முகம் வெளுத்து போய், தயங்கியபடி, “அது ஒன்னுமில்ல ஐயா, இப்படி திடுதிப்பென்று வேலையில் இருந்து வீட்டுக்கு போகச் சொல்கிறார்கள், எட்டாவது படித்து இருந்தால் தான் பியூனாக முடியும் என்று சொல்கிறார்கள், அதுதான் போன் செய்தேன்” என்று கூறினார்.
காமராஜரும், “முழுசா என்ன சொன்ன சொல்லு..? என்கிறார்.
இவரும் தயங்கியபடி… “அது இல்ல ஐயா… நம்ம முதலமைச்சரே நாலாவது அஞ்சாவது தான் படித்திருக்கிறார்… நாங்க மட்டும் எதுக்குயா எட்டாவது பாஸ் பண்ணனும் என்று கேட்டேன்” என்கிறார்.
தலைமை செயலரை அழைத்து “அந்த ஜி ஓ வில் பியூன் வேலைக்கு சேருபவர்கள் எட்டாவதுக்கு மேல் படித்திருக்க வேண்டும்” என்ற வரியை “இனிமேல்” பியூன் வேலைக்கு சேருபவர்கள்” என்று மாற்றுங்கள். இப்போது இருப்பவர்கள் அப்படியே இருக்கலாம் என்று ஆணை இருக்கட்டும்” என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..