மரத்தின் நிழல் – குட்டி ஸ்டோரி – 46
ஒரு அழகிய கிராமம் எங்கு பார்த்தாலும் வயல் வெளிகளும், பறவைகளின் கூட்டமும் என்று சத்தம் நிறைந்த ஊராக இருக்கும் அந்த கிராமம் அந்த ஊரில் ஒரு பெரிய அரசமரம் ஓன்று இருக்கிறது.
அதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் அதில் மகிழ்ச்சியாக விளையாடுவார்கள் வயதானவர்கள் அனைவரும் மரத்தின் அடியில் அமர்ந்து கதை பேசுவதும், அங்கயே வெயிலுக்கு இதமாக குளிர்ந்த நிழலில் தூங்குவதும் என்று அந்த ஊரில் வாழும் அனைவருக்கும் அது பயன்பட்டு கொண்டு இருந்தது.
இப்படி இருக்க அந்த மரத்தை வெட்டுவதற்கு வெளி ஊரில் இருந்து ஒரு வயதான தாத்தா ஒருவர் வந்திருந்தார். அதை பார்த்த ஊர் மக்கள் அனைவரும் அய்யா இந்த மரத்தை வெட்டாதீர்கள் இந்த மரம் எங்க வீட்டில் ஒருவராக இருக்கிறது. நாங்க சந்தோஷத்திலும் சோகத்திலும் இங்க வந்துதான் இருக்கிறோம்.
அதனால் இதை வெட்டி விட்டீர்கள் என்றால் எங்க ஊரே வெறிசோடி காணப்படும். வெயிலுக்கு இளைப்பாற கூட முடியாமல் போய்விடும் என்று கூறினார்கள்.
அட போங்கம்மா, எனக்கு இந்த மரத்தை வெட்டி நான் வேலை செய்தால்தான் ஏன் குடும்பம் சாப்பிட முடியும். இது பொளப்புமா அப்படினு சொல்லி மரத்தை வெட்டுவதற்கு கோடாலியை எடுத்து வந்து அதன் அடி வேரில் வெட்டினர்.
அது ஒரு கீறல் கூட போடாமல் அப்படியே இருந்துச்சி, மாறுபாடியும் வேகமாக வெட்டினர் அது அசையக் கூடவில்லை, சரி நாளைக்கு வந்து வெட்டிரலாம் பொழுது, சாய்கிற நேரம் ஆகிவிட்டது என்று கிளம்பி சென்றார்.
வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கும் பொழுது கனவில் அந்த ஊர்மக்கள் சொன்னதை நினைத்து கொண்டு இருந்தார். அவருக்கும் மரத்தை வெட்டுவதில் விரும்பம் இல்லாமல் போனது சரி நாளைக்கு சென்று அந்த முதலாளியிடம் மரத்தை வெட்ட முடியாது, என்று சொல்லிவிடலாம் என்று கூறினார்.
அவர் ஏன் அதை வெட்ட மறுக்கிறாய் என கேட்க, அந்த மரத்தின் மேல் அந்த ஊர்மக்கள் அனைவரும் பாசமாக இருக்கிறார்கள், என்று கூறினான். நீங்களும் யோசித்து பாருங்கள் ஒரு மரம் உங்களுக்கு எத்தனை பயன்களை தந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் நீங்கள் யோசிக்காமல் அதை அளித்து விடுகிறீர்கள்., அதனால் நமக்கு தான் பயன் இல்லாமல் போகுது என்பதை உணர்ந்து செயல்படுங்கள், முடிந்த அளவிற்கு மரங்களை நட்டு வைத்து பசுமையான சூழலை உருவாக்குவோம். மரம் வளர்ப்போம் பசுமையாக மாற்றுவோம்.
– சரஸ்வதி