சிம்பு 48..! சிம்புவின் அடுத்த பட அப்டேட்..? உற்சாகத்தில் ரசிகர்கள்..!
நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்த வெந்து தணிந்தது காடு படம் பெரிதாக ஓடவில்லை. அதன் பின்னர் கடந்த ஆண்டு வெளியான பத்து தல படமும் சொதப்பி விட்டதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
சிம்பு 48 :
கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள் எஸ்டிஆர் 48 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது அதற்கான தகவல் கிடைத்துள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு ராஜ்கமல் நிறுவனம் விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு 48 படத்தின் அப்டேட்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பது அமைந்துள்ளது.
துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி தக்லைஃப் படத்திலிருந்து கால்ஷீட் காரணமாக விலகிய நிலையில் சிம்பு அந்த படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதில் அவருக்கான சீன்களில் நடித்து முடித்தவுடன் சிம்பு 48 படத்தை தொடங்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
கொதம் மேனன் நடிப்பில் உருவான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி வரும் ஜூன் 8ம் தேதி சிம்பு 48 படத்தை ஆரம்பிக்கப் போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– பவானி கார்த்திக்