திமுகவை குறை சொல்ல பிரதமர் மோடிக்கு எந்தத் தகுதியும் இல்லை.. மு.க.ஸ்டாலின் பதிலடி…
திமுகவை குறை சொல்ல பிரதமர் மோடிக்கு எந்தத் தகுதியும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஒன்றிய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் மறைக்கப்படுவதாகவும், திமுக என்ற கட்சியே இனி இருக்காது எனவும் விமர்சித்தார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவைப் பற்றியும், கழக அரசைப் பற்றியும் பிரதமர் அவதூறுகளை அள்ளி வீசிவுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கும் பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும், திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு எனவும் எச்சரித்தார்.