வாரவிடுமுறையில் 1,130 கூடுதல் பேருந்துகள் இயக்கத் திட்டமா..??
வாரவிடுமுறை தினங்களை முன்னிட்டு, 1,130 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய ஊா்களுக்கு இன்று 365 பேருந்துகளும், நாளை 425 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 70 பேருந்துகளும், நாளை 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 435 சிறப்புப் பேருந்துகளும், நாளை 495 பேருந்துகளும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1130 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.