என்னது 15 துணை ராணுவ படையினர் தமிழ்நாடு வராங்களா..!!!
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகாக முதல்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழ்நாடு வர உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்..
நாடாளுமன்ற தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரதா சாகு, தேர்தல் தேதி மற்றும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, யார் எந்த பகுதியில் பணியில் ஈடுபடுவார்கள் என்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.