பொட்டுக்கடலை உருண்டை..!
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை 1 கப்
சர்க்கரை 1 கப்
நெய் கால் கப்
முந்திரி 6
செய்முறை:
பொட்டுக்கடலையை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
சர்க்கரை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் நெய் சேர்த்து சூடாக்கி அதில் முந்திரியை சேர்த்து வறுத்து அடுப்பை அணைத்து அதில் பொட்டுக்கடலை மற்றும் சர்க்கரை தூளை கலந்து லேசான சூட்டில் உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் பொட்டுக்கடலை உருண்டை மணமணக்க தயார்.