சுவையான இட்லிபொடி நெய் கோழி வறுவல்…!
ஊற வைப்பதற்கு தேவையானவை
சிக்கன் – 1/2 கிலோ
முட்டை – 1
அரிசி மாவு – 1 தேக்கரண்டி
சோள மாவு – 1 தேக்கரண்டி
கடலை மாவு – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
தயிர் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – 2 தே.கரண்டி
வெங்காயம் – 2(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (துண்டுகளாக்கப்பட்டது)
கறிவேப்பலை – சிறிது
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
இட்லி பொடி – 1 1/2 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிது
ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு நன்றாக சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.
பின் ஊறவைக்க மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சிக்கனுடன் சேர்த்து உப்பு கலந்து அனைத்தையும் ஒன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து முக்கால் பதத்திற்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் அதில் தக்காளி சேர்த்து உப்பு போட்டு தக்காளி நல்லா சாப்ட்டா ஆகும் வரை வதக்க வேண்டும்.
பிறது அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கி அதனுடன் இட்லிபொடி, நெய் சேர்த்து கிளறிவிடவும் இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் நல்ல காரசாரமான இட்லி பொடி நெய் வறுவல் தயார்.
