வீட்டிலே காஞ்சிபுரம் இட்லி செய்ங்க..!
தேவையான பொருட்கள்:
இட்லி (புழுங்கல்) அரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
சுக்கு பொடி – ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தேங்காய் – 1/2 கப் நறுக்கியது
முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் (துண்டுகள்)
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணை – 5 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்றவாறு
செய்முறை:
அரிசி இரண்டு கப் எடுத்துக் கொண்டு நீரில் கழுவி அரிசி மூழ்கும் வரை நீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
உளுந்தை நீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து நீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பின் இரண்டையும் தனித்தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து இரவு முழுக்க புளிக்க வேண்டும்.
ஒரு வாணலில் நெய் சேர்த்து முந்திரி, சுக்குப்பொடி சேர்த்து முந்திரி லேசாக வறுத்து மாவில் இதனை கொட்டவும்.
அதே வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் மிளகு சீரகத்தை அப்படியே முழுசாகவும், மற்றொரு ஸ்பூன் அதை பொடித்தும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து லேசாக வறுத்து மாவில் கொட்டிக் கொள்ள வேண்டும்.
இதில் துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
ஒரே அளவுள்ள டம்ளரில் எண்ணெய் தடவி முக்கால் அளவிற்கு மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து பாத்திரத்தை மூடி 20 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.
பின் திறந்து இட்லிகளை எடுத்து பரிமாறலாம்.
இத்துடன் காரசட்னி சுவையாக இருக்கும்.
அவ்வளவுதான் காஞ்சிபுரம் இட்லி தயார்.