1984ம் ஆண்டு முதல் திருமணமான பெண்களுக்கான திருமதி உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 21 ஆண்டுகளுக்குப் பின் ’திருமதி உலக அழகி’ பட்டத்தை இந்தியர் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆண்டு தோறும் திருமணமான பெண்களுக்கு உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டிற்கான திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் 63 நாடுகளிலிருந்து பல திருமதிகள் பங்குபெற்றனர். அதனை தொடர்ந்து போட்டியின் முடிவுகள் வெளியானது அதில் காஷ்மீரை சேர்ந்த சர்கம் கெளஷல் என்ற பெண் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு. திருமதி உலக அழகி பட்டதை வென்றார்.
பட்டத்தை வென்ற சர்கம் கெளஷளுக்கு நடப்பு திருமதி உலக அழகியாக இருந்த ஷைலின் ஃபோர்டு கிரீடம் அணிவித்தார். இதன் மூலம் 21 ஆண்டுகளுக்கு பின் ஒரு இந்தியர் திருமதி உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். இதற்குமுன் கடந்த 2001ம் ஆண்டு இந்தியாவின் அதிதி கோவித்ரிகர் ’திருமதி உலக அழகி பட்டம்’ பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.