இந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லாமல் இருந்தாலும் கேரளாவில் கால்பந்து ஆட்டத்திற்கு அமோக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் 1000 பேருக்கு இலவச பிரியாணி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
கால்பந்து உலக கோப்பை தொடங்கிய முதலே கேரளாவில் திருவிழா போல் கொண்டாடினர். பல துணிக்கடைகளில் தள்ளுபடி அளிப்பது போன்றவைகள் மூலம் கால்பந்து உலக கோப்பையை வெகுவாக கொண்டாடி வந்தனர். அந்த மாநிலத்தில் அர்ஜென்டினா அணி மற்றும் மெஸ்ஸிக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. நேற்று மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி உலக கோப்பையை தன வசமாக்கியது இதனால் உலகம் முழுவதும் அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் நகரில் ஓட்டல் நடத்தி வரும் ஷிபு என்பவர் அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் தீவிர ராசிகராவார். அந்த அணியின் வெற்றயை கொண்டாடும் வகையில் தன் ஹோட்டலில் 1000 பேருக்கு இலவசமாக பிரியாணி அளிக்கப்படும் என்று அறிவித்தார் அதன்படி 1000 பேருக்கு பிரியாணி கொடுக்கப்பட்டது. இந்த ரசிகரின் இந்த செயல் மாநிலத்தில் பெரும் வைரலாகி வருகிறது.