இன்று கூடிய மாநிலங்களவை கூட்டத்தில் இந்தியா-சீனா எல்லை பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவை தலைவரிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் அவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவை கூட்டத்தில் இன்று முக்கிய விவாதங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்ப்புடன் மாநிலங்களவை கூடியது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா-சீனா எல்லையில் நாடாகும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கபட வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார். அதற்கு அவை தலைவர் ஜெகதீப் தன்கர் மறுப்பு தெரிவித்தார். அவை தலைவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளதாகவும், அவையின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறும் பதிலளித்தார்.இதனால் மாநிலங்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, நமது நாட்டின் நிலத்தை சீனா ஆக்கிரமித்து கொண்டிருக்கும் நிலையில், அந்த பிரச்னையை பற்றி பேசாமல், வேறு என்ன பேச முடியும் என மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இது பற்றி விவாதிக்க அவை தலைவர் அனுமதி மறுத்ததால் அவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளியேறியது.