ஒட்டுமொத்த சனாதனத்தை எதிர்க்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,
“திமுக ஆட்சி பற்றி குறைசொல்வதற்கு, எந்த பொருளும் கிடைக்கவில்லை. கையில் எதுவும் கிடைக்காததால் பாஜக தலைவர் அண்ணாமலை தவறான வரலாறுகளை உளறி வருகிறார். உடன்கட்டை ஏறுதல் என்பது கற்புகாகதான் என்று அண்ணாமலை குழம்பி போய் கூறி வருகிறார். தமிழகத்தில் பாஜகவை தக்க வைத்துக் கொள்வதற்காக, அண்ணாமலை புரியாமல் திகைத்து கொண்டு இருக்கிறார். ஏதாவது ஒரு பிரச்சினை கையில் எடுக்கவேண்டும் என்பதற்காக உப்பு சப்பு இல்லாத சனாதனத்தை கையில் எடுத்துள்ளார் .
திமுகவை பொருத்தவரை சனாதனத்தை ஏற்றுக் கொண்டவர்களை எதிர்க்கவில்லை, சனாதனத்தில் உள்ள சில கோட்பாடுகளை தான் எதிர்க்கிறோம். திமுக சமத்துவ ஆட்சி சமத்துவத்தை எப்பொழுதும் வலியுறுத்தி வருகிறோம். சமத்துவத்தை வலியுறுத்துகின்ற கடமை உறுதி திமுகவிற்கு தான் இருக்கிறது. இந்து சமயத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, பெரிய மாற்றத்தை தமிழக முதல்வர் உருவாக்கி காட்டியுள்ளார். இதனால் தமிழக முதல்வரை இறையன்பர்களும் பக்திமான்களும் போற்றி பாராட்டி வருகின்றனர்.
மக்களிடையே உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடு இருத்தல் கூடாது உள்ளிட்டவைகள் சனாதனத்தில் குறிப்பிட்டுள்ளதால் இதுதான் எதிர்க்கிறோம். சனாதத்தை ஏற்றுக்கொண்ட அனைவரையும் எதிர்க்கவில்லை. இந்துக்களையும், இந்து மதத்தை மனதார திமுக இயக்கம் தான் வரவேற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்து மதத்தை குற்றம் சுமத்தி குறிப்பிட்டு காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இறை நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம். அதில் திமுக தலையிட்டது கிடையாது. ஆண்டவனை வழிபடுபவர்களையும், வழிபடாதவர்களையும் ஏற்றுக் கொள்வோம். சமத்துவம் ஒரு அங்கம் தான் திமுக என்பதை அண்ணாமலைக்கு தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை கிடைக்க அரசு செய்த சூப்பர் வழி… அனுப்பபட்ட ஏ.டி.எம் கார்டுகள்… ஆரம்பிக்கும் விநியோகங்கள்..!
Discussion about this post