அதிகரிக்கும் நிபா வைரஸ் எதிரொலி விடுமுறை அறிவிப்பு..!!
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த 126 பேர் கேரளா சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர்.
இதனால் தமிழக கேரளா எல்லையோரம் உள்ள சோதனை சாவடிகளில் பரிசோதனை தீவிரபடுத்தப் பட்டுள்ளது மேலும் கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்பவரை கண்காணிக்கவும், அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும் நிபா வைரஸ் எதிரொலியால் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பாதிப்பால் இதுவரை 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
77 பேர் வீடுகளில் தனிமை படுத்தப் பட்டுள்ளனர். 157 பேர் கண்காணிப்பில் உள்ளனர். சுகாதர பணியாளர்களில் 13 பேர் கோழிக்கோடு மருத்துமனையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். குட்டியாடி, ஆயஞ்சேரி பகுதியில் மத்திய குழுவீனர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அங்கு நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோரை கணக்கெடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
அதேபோல் நிபா வைரஸ் தொற்று காரணமாக புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
Discussion about this post