மதுரையில் நடக்கவிருக்கும் மதிமுக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வருகிறது.
மதிமுகம் உள்ளிட்ட அத்தனை முன்னனி செய்தி தொலைகாட்சியிலும் வைகோ அழைக்கிறார் என விளம்பரங்கள். மேலும் அனைத்து முன்னனி நாளிதழ்கள் வார இதழ்களின் ஒரு பக்க வண்ண விளம்பரங்கள் அதுபோக முன்னணி தினசரி நாளிதழ்களிலும் இன்றும் நாளையும் விளம்பரங்கள்.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் கடந்து செல்லும் இடங்களில் எல்லாம் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு, வைகோ அழைக்கிறார் மதுரைக்கு வாரீர் என சுவர் விளம்பரங்கள்.
அதுபோக அனைத்து ஊர்களிலும் வண்ண வால் போஸ்டர்கள்
மதுரை மாநகரம் முழுவதும் பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்கள், பிரமாண்டமான வால் போஸ்டர்கள் என ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு இணையாக பணிகளை செய்து இருக்கின்றனர் மதிமுகவினர்.
உண்மையில் பிரமிப்பின் உச்சம் தான்.
வருமானம் கிடையாது. அரசியலை வைத்து பிழைப்பு நடத்துவது கிடையாது நாளையே தேர்தலில் போட்டி இட்டு வெல்வோம் என்ற நம்பிக்கை கிடையாது எதுவுமே இல்லாமல் பொருளாதாரத்தை இழந்து இத்தனை வருடங்களாக மதிமுகவில் பயணித்து இருந்தாலும், எப்படி இப்படி இவ்வளவு பணிகளை செய்து இருக்கிறார்கள் மதிமுகவினர்.
அதற்கு ஒரே ஒரே காரணம் அந்த இரண்டெழுத்து மந்திரம் #வைகோ
தலைவர் அறிவிச்சுட்டார் தலைவர் மனம் சந்தோசப்படனும். மாநாட்டுல தலைவரோட கம்பீரமான முகத்தை பார்க்கனும் நம்மை பரவசப்படுத்தும் உரையையும் கேட்கனும் அதுக்காக எதையும் எதிர்பாராது எந்த அளவுக்கும் இறங்கி வேலை செய்வோம் என்பதை தமிழ்நாடு முழுவதும் உள்ள மதிமுகவினர் நிரூபித்து இருக்கிறார்கள்
மதுரை மாநாடு மதிமுகவின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் வகையில் வெற்றிகரமானதாக நிகழ போகிறது.
தலைவர் வைகோவின் நம்பிக்கை நட்சத்திரமாம் மதுரை தெற்கு தொகுதி மதிமுக சட்ட மன்ற உறுப்பினர் மாநாடுகளை நடுத்துவதில் பிரமாண்டத்திற்கு பெயர் போன அண்ணன் புதூர் மு.பூமிநாதன் அவர்கள் தலைமையில் மொத்த மதுரையையையும் மதிமுக மாநாட்டிற்கு தயார்படுத்தி வருகிறார்கள்.
மதுரை மதிமுக மாநாடு உறுதியாய் வெற்றி பெற போகிறது.
அனைவரது கவனத்தையும் மதிமுகவின் பக்கம் திருப்ப போகிறது.