ஆன்லைன் லோன் செயலியால் சீரழிந்த குடும்பம்..!! இனியாவது கவனமாக இருங்க மக்களே..!!
கேரளா மாநிலம் கொச்சியில் ஆன்லைன் செயலி மூலம் லோன் எடுத்த சம்பவத்தில் பெண்ணின் படத்தை மார்பிங் செய்து சிலருக்கு அனுப்பியதால் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேராளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கடம்பக்குடியைச் சேர்ந்த நிஜோ சில்பா தம்பதியினர் தங்களின் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். வீட்டின் மேல் பகுதியில் நிஜோ சில்பாவும், தரைதளத்தில் நிஜோவின் தாயார் மற்றும் நிசாவின் சகோதரனின் குடும்பமும் வசித்து வந்துள்ளது.
இந்நிலையில் வழக்கம் போல் தரை தளத்திற்கு நிஜோவின் குழந்தைகள் செல்லும் நிலையில் காலையில் இருந்து குழந்தைகள் வரவில்லை. என எண்ணிய குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து, நிஜோவின் தாயார் மேல் மாடிக்கு சென்று பார்த்த போது குழந்தைகள் இருவரும் கட்டிலில் சடலமாகவும், கணவன் மனைவி தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்துள்ளனர்.
பதறிய தாய், இதுகுறித்து கேரளா காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அந்த விசாரணையில் நிஜோவின் குடும்பத்திற்கு கடன் சுமை இருந்தது தெரியவந்தது, நிஜோவின் மனைவி செல்போனில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டுள்ள செயலி மூலம் கடன் வாங்கியதும் தெரிய வந்தது.
செயலி மூலம் கடன் கொடுக்கும் மர்ம கும்பல் கடனை சரியாக செலுத்தவில்லை என்பதால் நிஜோவின் மனைவியின் படத்தை மார்பிங் செய்து சிலருக்கு அனுப்பியுள்ளது தெரிந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட அவமானத்தால் குழந்தைகள் இருவரையும் கொலை செய்து கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. குழந்தைகள் மற்றும் கணவன் மனைவி இருவரும் செயலியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post