மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் செயல்படுகிறது..! ஜி.கே.வாசன் பேட்டி..!
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் வளர்ச்சி அடைவதற்கு மத்திய நிதி அமைச்சர் வழிவகை செய்துள்ளதாக ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி அனைத்து மாநிலங்கள் உள்ளடக்கியது. எல்லாம் வருடத்திலும் எல்லா நிதிநிலை அறிக்கையிலும் அனைத்து மாநிலங்களின் பெயரை சொல்லிக் குறிப்பிடுவதில்லை.
அது பாஜக ஆட்சி இருந்தாலும் கூட அனைத்தையும் உள்ளடக்கிய திட்டங்கள் உள்ளதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.
மத்திய நிதிநிலை அறிக்கையினை கண்டித்து சிலர் போராட்டம் நடத்துவது எதிர்க்கட்சியாக அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினை பலப்படுத்தும் நோக்கத்தில் 234 தொகுதியினை நான்கு மண்டலங்களாக பிரித்து., முதல் நாளான இன்று சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர், உள்ளிட்ட 11 மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன்..
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்றத்திற்காக தாமாகவை வலிமையாக மாற்றுவதற்கு அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்திற்கு புதிய நிர்வாகிகள் கூட்டம் தற்போது நடைபெறுவதாகவும் இதை அடுத்து கோவை நிர்வாகிகள் கூட்டம், நாளை மறுதினம் மதுரை, அன்று மாலை திருச்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.
இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட என்று ரீதியில் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் இந்த ஆண்டு துவங்கப்படும் அதற்கான கோட்பாடுகள் வகுக்கப்பட்டு வருகிறது,
ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.. புதிய உறுப்பினர்கள் சேர்த்த பின்பு 4 மண்டலங்களுக்கு சென்று தொண்டர்களோடு தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து ஆலோசிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
தொடர்ந்த அவர் பேசுவையில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வருங்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், ஒவ்வொரு துறை முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இருப்பதாகவும் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் வளர்ச்சி அடைவதற்கு மத்திய நிதி அமைச்சர் வழிவகை செய்துள்ளார் .
விவசாயிகள், பெண்கள், மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திருப்பதாகவும் ,
இந்தியாவின் உள்கட்டமைப்பு வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு 11.11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கிருப்பது வரவேற்க்க கூடியதாகும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் இந்த வளர்ச்சி அனைத்து மாநிலங்கள் உள்ளடக்கியது. எல்லாம் வருடத்திலும் எல்லா நிதிநிலை அறிக்கையிலும் அனைத்து மாநிலங்களின் பெயரை சொல்லிக் குறிப்பிடுவதில்லை அது பாஜக ஆட்சி இருந்தாலும் அனைத்தையும் உள்ளடக்கிய திட்டங்கள் உள்ளதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக அரசியல் காரணங்களுக்காக இது போன்ற பேசக்கூடாது அதனைத் தவிர்த்து விட்டு மாநில வளர்ச்சிக்காக பேச வேண்டும் .
மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் செயல்படுவதாகவும் நிதியினை அனைத்து மாநிலத்திற்கும் சரியாக பகிர்ந்து கொடுத்திருப்பதாகவும் ஆகையால் இந்த நிதிநிலை அறிக்கையினை தாமாக வரவேற்பதாக அவர் கூறினார்.
மின் கட்டணம் உயர்வு மக்களின் மீது மேலும் சுமையை ஏற்றக் கூடியது, ஒரு கையில் கொடுப்பது மறு கையில் வாங்கும் பழக்கத்தை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..