இந்தியா அணி நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடரை இழந்தது. இந்தியா அணி நியூஸிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது டி20 தொடரை வென்ற இந்தியா அணி ஓடிஐ தொடரை இழந்துள்ளது.
டி20 உலககோப்பைக்கு பிறகு இந்தியா அணி நியூஸிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் தொடரை ஆட சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்நிலையில் பாண்டிய தலைமையிலான டி20 தொடரை வென்றது பின்னர் ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கி இந்தியா அணி முதல் போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது பின்னர் இரண்டாம் ஒரு நாள் போட்டி மழையால் ரத்தானது அதை தொடர்ந்து நேற்று கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா அணி 47.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் தொடக்க ஆடகர்களான ஷிகர்தவான் 28 ரன்களிலும் சுப்மன் கில் 13 ரன்களிலும் தனது விக்கெட்டை இழந்தனர். பின்னர் ரிஷாப் பந்த் 10 ரன்களிலும் சூர்யா குமார் யாதவ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் நிதானமாக ஆடிய ஷ்ரேயஸ் ஐயர் 49 ரன்களில் அதமிழந்து அஅரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார் பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் நிதானமான ஆட்டத்தால் இந்தியா 200 ரன்களை கடந்தது இறுதியில் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க இந்தியா அணி 219 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது.
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கி நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்கார்கள் கான்வே மற்றும் பின் ஆலன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அரை சதத்தை அடித்த கடந்த பின் ஆலன் 57 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. தொடர் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டு நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றது இதனால் இந்தியா அணி நியூஸிலாந்து அணியிடம் ஓடிஐ தொடரை இழந்தது.