இன்று சென்னையிலுள்ள ராஜபவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் ரகுபதி சந்தித்தார் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசியே அமைச்சர் தமிழக ஆளுநர் ரவி ஒப்புதல் தந்தால் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் அமல்படுத்தபடும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் கூறுகையில், இன்று ஆளுநருடனான சந்திப்பில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான விளக்கங்களை விரிவாக சமர்பித்துள்ளேன். இந்த மசோதா குறித்து ஆளுனரிடம் அரைமணி நேரத்திற்கு மேலாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் கூறுகையில், ஆப்லைனில் விளையாடு வதற்கும் ஆன்லைனில் விளையாடு வதற்கும் இருக்கும் வேறுபாடுகள் குறித்து விளக்கமளிக்கபட்டுள்ளது.
ஆப்லைனில் விளையாடுவதால் யாரும் பணத்தை இழக்கும் நிலை ஏற்படாது ஆகையால் அதை விளையாடி யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை ஆனால் ஆன்லைனில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து கூறியுள்ளோம். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறியுள்ளார். மேலும் ஆளுநர் ஒப்புதல் அளித்த உடனே ஆன்லைன் ரம்மி தடை சட்டம் அமலுக்கு வரும் என்று செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.