காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பவஹால்பூரில் குறிப்பாக ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவரின் உதவியாளர்கள் 4 பேரும் பலியாகியுள்ளனர்.
இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக, தாக்கி அழித்துள்ளது. இந்த தாக்குதலில் ஜெய்ஸ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாதிகள் முகாம்கள் தாக்குதலுக்குள்ளானது.
இந்த நிலையில் ஜெய்ஷ் முகமது அமைப்பின் தலைவரான மஸ்ஜித் அசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இன்றிரவு, எனது குடும்பத்தில் இருந்து 10 பேர் ஒரே நேரத்தில் சொர்க்கம் செல்லும் பேறு பெற்றனர். நான்கு குழந்தைகள் சொர்க்கத்தில் மலர்களாகியுள்ளனர். என் வாழ்விற்கும் மேலான என் மூத்த சகோதரி சாஹிபா, அவரது கணவர், என் மருமகன் அலிம் ஃபாசில், அவரது மனைவி, உறவினர் அலாம் ஃபாஸிலா. எங்கள் மருமகன் மற்றும் அவரது மனைவி இறைவனடி சேர்ந்து விட்டனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் மீது மோடி குறிவைத்து தாக்கினார். இந்த துயரமம் தரும் அதிர்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை.
ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, எந்த விரக்தியும் இல்லை, எந்த பயமும் இல்லை. என் மனதில் மீண்டும் மீண்டும் வருவது என்னவென்றால், நான் கூட இந்த 14 பேரில் ஒருவராக இருந்திருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இறைவனை சந்திக்கும் நேரம் துல்லியமாக தீர்மானிக்கப்பட்டது. இப்போது மோடியின் இந்த கொடூரம் அனைத்து அமைதியான வழிகளை முறித்துவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.