பாரம்பரிய ஆந்திரா உளுந்து லட்டு… ஈவினிங் ஸ்நாக்…
- உளுந்து – 1 கப்
- வெல்லம் – 1 ½ கப்
- நெய் – ½ கப்
- ஏலக்காய் தூள் – ½ ஸ்பூன்
- ஜாதிக்காய் தூள் – ¼ ஸ்பூன்
உளுந்தை அரை மணி நேரத்திற்கு சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும்.
பின் ஊறிய உளுந்தை தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்க வேண்டும். பின் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் நெய் சேர்த்து அரைத்த மாவு கலந்து நன்றாக வதக்கவும், மாவு வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
பின் பொடி செய்த வெல்லம், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
பிறகு அனைத்தையும் நன்றாக கலந்து, இந்த மாவில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் , ஆந்திரா லட்டு தயார்.
ஈசியாக உடனே செய்யக்கூடிய இந்த இனிப்பை இன்னிக்கு வீட்ல குழந்தைகளுக்கு செய்து குடுங்க..
