கள்ளக்காதல் மோகம் இளம் பெண் தற்கொலை.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
சென்னை சேர்ந்த சரவணன்42 எனபவர் பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமாணமாகி விஜயசாந்தி என்ற மனைவியும் இரண்டு மகன்கள் உள்ளது. இவரது மனைவி பிரபல துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சரவணன் வெளிநாட்டில் வேலை செய்த பொழுது சம்பளத்தை மணலி புதூரில் உள்ள தன்னுடைய தங்கையின் கணவரான மற்றொரு சரவணன் என்பவருக்கு அனுப்பி வைத்தார்.
அவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். அந்த பணத்தை விஜயசாந்தி வீட்டில் கொடுப்பதற்கு அவர் அடிக்கடி சென்று வந்ததால் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு திரும்பி வந்த சரவணன் மனைவியின் கள்ளக்காதல் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து மனைவியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் விஜய் சாந்தி இந்த உறவை முடித்து கொள்ளுமாறு கூறியதால் தன்னுடைய காதலை தொடரும்படி மெக்கானிக் சரவணன் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த விஜய் சாந்தி நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலில் பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்ட போது அவருடைய வீட்டில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் என் சாவுக்கு என் கணவர் சரவணன் மற்றும் என்னுடன் கள்ளக்காதலன் சரவணன் ஆகியோர் தான் காரணம் என்று எழுதியுள்ளார்.
இதனை எடுத்து காவல்துறையினர் கணவர் சரவணன் மற்றும் உறவுக்கார சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றமர்.
-பவானி கார்த்திக்