ஈசியாக நீங்களும் சமையல் ராணி ஆகலாம்..!
ஐஸ்கிரீம் வைக்கும் கிண்ணத்தை சிறிது நேரம் பிரிஜ்ஜில் வைத்து பின் அதில் ஐஸ்கிரீம் வைக்க விரைவில் உருகாது.
சோம்பு, சீரகம் ஆகியவற்றை அப்படியே வைக்காமல் லேசாக வறுத்து டப்பாவில் போட்டு வைக்க பூச்சுகள் அண்டாது.
பொரித்த சிப்ஸ், அப்பளம், பிஸ்கட் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்து பிரிஜ்ஜில் வைக்க நீண்ட நேரத்திற்கு அருமையாக இருக்கும்.
சமைக்கும் பாத்திரத்தில் லேசாக எண்ணெய் தடவி பின் சமைக்க அடி பிடிக்காது.
எந்த வகையான காய் கூட்டிற்கும் தேங்காய், மிளகாய் மற்றும் சீரகம் அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
வெண்டைக்காய் சமைக்குபோது அதில் எலுமிச்சை சாறு சேர்த்து சமைக்க ருசியாக இருக்கும்.
வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது இஞ்சி பூண்டு கூட பச்சை மிளகாய், புதினா இலைகளை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
சூடான சப்பாத்தி மீது நாட்டுச்சர்க்கரை, ஏலகாய்த்தூள் மற்றும் சிறிது பால் ஊற்றி சிறிது ஊறவைத்து குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்.
சுண்டல் வேகவைத்த நீரை கீழே கொட்டாமல் சாம்பாரில் சேர்க்க சுவையாக இருக்கும்.
புதினா மற்றும் கொத்தமல்லி துவையல் அரைக்கும்போது அதில் நீருக்கு பதிலாக தயிர் சேர்த்து அரைக்க சுவையாக இருக்கும்.
வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது அதில் பட்டை, லவங்கபூ, ஏலக்காய் சேர்த்தால் நெய் நல்ல வாசனையாக இருக்கும்.
ஆம்லெட் செய்யும்போது அதில் சிறிது பால் சேர்த்து அடித்து செய்து பாருங்க சூப்பராக இருக்கும்.
அடை மாவுடன் சிறிது கார்ன் பிளேக்ஸ் கலந்து செய்ய மென்மையாக இருக்கும்.