மணக்க மணக்க மண்பானை பிரியாணி…!
சிக்கன் – 1/2 கிலோ
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 1ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – 3 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
நெய் – 3 ஸ்பூன்
பட்டை,கிராம்பு, பிரியாணி இலை,சோம்பு
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
தக்காளி – 2
எலுமிச்சை – 1
புதினா – கைப்பிடி
கொத்தமல்லி – சிறிது
பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அதில் உப்பு,மஞ்சல்தூள்,மிளகாய்த்தூள்,கரம் மசாலா, தயிர் ஆகியவற்றை சேர்த்து கலந்து தனியே வைக்கவும்.
மண்பானை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய், சிரிது நெய் ஊற்றி சூடானதும், பட்டை,கிராம்பு,பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். பின் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து வதக்கவும்.
அதில் புதினா, கொத்தமல்லி, தயிர் சேர்த்து கிளறி வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் சிக்கன் சேர்த்து நன்றாக வதக்கவும், பின் 4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
தண்ணீர் கொதி வந்ததும் ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து மூடி 15 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
பின் 5 நிமிடங்களுக்கு தம் போட்டு இறக்கினால் மண்பானை பிரியாணி இலை தயார்.