“கோதாவரி..” இந்த வசனம் நினைவு இருக்கிறதா..? மறைந்த நடிகர் விசு-வின்..!
1945ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தவர் தான் மறைந்த பலம் பெரும் ஆளுமை நடிகர், இயக்குனர் “விசு”.., அது மட்டுமா கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் விசு.
முதன் முதலாக மேடை நாடகங்களை இயக்கி அதில் நடித்து வந்தார். பின்னர் பழம்பெரும் இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக சேர்ந்து திரைப்பயணத்தை தொடங்கினார்.
அவர் முதன் முதலாக இயக்கிய படம் “கண்மணி பூங்கா” அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, “மணல் கயிறு”, “ரகசியம்”, “புதிய சகாப்தம்”, “சம்சாரம் அது மின்சாரம்” உள்ளிட்ட சூப்பர் ஹிட் குடும்ப திரைப்படங்களை மட்டுமே இயக்கி ஒவ்வொரு குடும்பங்களிலும் குடுபத்தினராக இடம் பிடித்தார்.
தனது திரையுலக வாழ்க்கையில் குடும்பங்களை மையப்படுத்திய படங்களின் மூலம் தனக்கான முத்திரையை பதித்தவர் விசு.
1980, 90களில் இவரின் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே, அந்த காலகட்டத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து சமூக பிரச்னையை வெளிக்காட்டும் விதமாகவோ அல்லது அதற்கான தீர்வு சொல்லும் படமாகவே இருக்கும்.
குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் வசனங்களும் தற்போது வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒன்று என சொல்லலாம்…
“கோதாவரி வீட்டுக்கு நடுவே கோட்டை கிழி டி…” அப்படினு கமலா கமேஷ் அவர்களை பார்த்து சொல்லும் வசனம் சூப்பர் என சொல்லலாம்..
அதை விட ரகுவரன் அவர்களிடம் பேசும் இந்த வசனம் அல்டிமேட் என சொல்லலாம்..
விசு : நீ ட்ரெயின் ல அடிபட்டு சாக கிடந்த அப்போ 3 பாட்டில் ரத்தம் கொடுத்து காப்பாத்திய அம்மையப்ப முதலியாரை உனக்கு தெரியல.. இந்த வசனம் மறக்க முடியாத வசனம் என சொல்லலாம்..
படத்தில் மட்டுமா 90ஸ் களில் வந்த “அரட்டை அரங்கம்” என பிரபல நிகழ்ச்சியில் நடுவராக சேர்ந்து நிகழ்ச்சியை நடத்தினர்.. அவருக்கு பின் இன்று வரை அந்த நிகழ்ச்சிக்கு ஈடுகொடுத்து பேசுபவர் யாரும் இல்லை என சொல்லலாம்…
இப்படி பலரின் அன்பை பற்றி நடிகரும் இயக்குனருமான “விசு” கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்..
இன்று மறைந்த நடிகர் விசு அவர்களின் 79வது பிறந்தநாள்.. அவரை பற்றிய இந்த கட்டுரை எழுதியதில் “மதிமுகம்” என்றும் பெருமைக்கொள்ளும்…
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..