பெண்களே இது உங்களுக்குத்தான்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- ரவையை மிக்ஸியில் சேர்த்து தூளாக்கி இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைத்து தோசை ஊற்றினால் சுவையாக இருக்கும்.
- பழுத்த தக்காளியின் தோலை உரிக்க அதனை சூடான நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து பின் உரித்தால் ஈசியாக வரும்.
- கறிவேப்பிலை காயாமல் இருக்க அதனை அலுமினிய பாத்திரத்தில் வைக்க வாடாமல் இருக்கும்.
- சூப்பு செய்யும்போது அதில் இரண்டு ஸ்பூன் பார்லி வாட்டர் கலந்து சாப்பிட உடலுக்கு ஆரோக்கியமானது.
- டீ, காபி குடிக்கும் பீங்கான் கப்பில் கறை இருந்தால் வெங்காயம் கொண்டு தேய்த்தால் கறை நீங்கிவிடும்.
- மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமலும் பூச்சுகள் பிடிக்காமலும் இருக்கும்.
- வடகம் தயாரிக்கும்போது கறிவேப்பிலை அரைத்து அதில் கலந்து சேர்த்தால் வடகம் நல்ல வாசனையாக இருக்கும்.
- அடைக்கு கேரட் துருவி போட்டு செய்தால் நல்ல நிறமாகவும் வாசனையாகவும் இருக்கும்.
- சீடை செய்யும்போது சீடை வெடிக்காமல் இருக்க அதனை ஊசியால் குத்தி பின் பொரிக்கலாம்.
- பாலை தயிருக்கு புரை ஊற்றும்போது அதில் சிறிது அரிசி கஞ்சியை சேர்த்து ஊற்றினால் தயிர் நன்றாக கெட்டியாக வரும்.
- சாதம் வடிக்கும்போது அதனை சிறிது நேரம் நீரில் ஊறவைத்து பின் சமைத்தால் சாதம் நீளமாகவும் உதிரி உதிரியாகவும் வரும்.
- வெல்லம் சேர்த்து செய்யும் பலகாரங்களுக்கு நெய் ஊற்றி செய்தால் சுவை அருமையாக இருக்கும்.
- பூரிக்கு மாவு பிசையும்போது அதில் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் நீண்ட நேரம் நமத்து போகாமல் இருக்கும்.