என்னது 5 வயது சிறுமி நோபல் உலக சாதனையா..!!!
கொடைக்கானலில் ஒரு நிமிடத்தில் 30 வகைகளில் சிலம்பம் சுற்றி, 5 வயது சிறுமி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மோகன் ராஜ் என்பவரின் 5 வயது மகள் கனிஷ்கா. இவர் ஆஞ்சநேயா சிலம்பம் பயிற்சி பள்ளியில் கடந்த 3 வருடங்களாக பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்த சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக அரசு விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் சிலம்பம் சுற்றும் போட்டி நடைபெற்றுள்ளது.
அதில் கலந்து கொண்ட கனிஷ்கா ஒரு நிமிடத்தில் 30 வகை சிலம்பத்தினை சுற்றி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதனைதொடர்ந்து, சிறுமிக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கெளரவித்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற பல்வேறு பயிற்சிகளை எடுத்து வருவதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
