பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்தியா பாகிஸ்தான் மீது விமானப்படை ஏதாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உலகநாடுகளிடத்தில் விளக்கி கூற அனைத்துக்கட்சியை சேர்ந்த 7 எம்பிக்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. ரவிசங்கர் பிரசாத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த சஞ்சய் குமார் ஷா, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பஜையந்த் பாண்டா, திமுகவை சேர்ந்த கனி மொழி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா புலே, காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் சிவசேனாவின் ஸ்ரீநாத் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மே 22ம் தேதி முதல் அமெரிக்கா, பிரிட்டன், கத்தார், யு.ஏ.ஈ, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க திட்டமிடப்பட்டுள்ளது.