பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படைத் தளங்களை துவம்சம் செய்தன. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து வந்தது. இப்போது, அந்த நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், தன் வாயாலேயே செம அடி விழுந்ததை ஒப்புப் கொண்டுள்ளார்.
அவர் பேசியதாக வீடியோ ஒன்றை பாஜக ஐ.டி விங் பரப்பி வருகிறது. அந்த வீடியோவில் அவர், இந்திய போர் விமானங்கள் ராவல்பிண்டியிலுள்ள நுர்கான் விமானப்படைத் தளங்களை தாக்கி அழித்தாகவும் 10ம் தேதி இரவு 2.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆஷிம் முனீர் என்னை கூப்பிட்டார். அப்போது, நுர்கான் உள்பட பல விமானத் தளங்கள் தாக்கப்பட்டுள்ள. இது சற்று கவலைக்குறியது என்று சொன்னார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்குள் புகுந்து 1971ம் ஆண்டுக்கு பிறகு இந்திய விமானப்படை தாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.