டேஸ்டியான தேங்காய் பால் குணுக்கு இன்னிக்கு வீட்ல செய்து குடுங்க..!
துருவிய தேங்காய்-1 மூடி.
ஏலக்காய்-2
வெல்லம்-1கப்.
வெள்ளை உளுந்து-100 கிராம்.
பச்சரிசி-1 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காயை போட்டு தண்ணீர் விட்டு அரைத்து அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
உளுந்து மற்றும் பச்சரிசியை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதனை நன்றாக கெட்டியாக உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய்ப்பாலில் ஏலக்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அரைத்த மாவை சிறு சிறு துண்டுகளாக போட்டு முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை தேங்காய் பாலில் சேர்த்து நன்றாக ஊற வைக்கவும்.
நன்றாக ஊறியதும் அதை சாப்பிட்டால் ரொம்ப ருசியாக இருக்கும்.
