முதல்முறையாக சபாநாயக்கர் தேர்தல்..! “இண்டியா” கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பளார்..?
மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. முதல் முறையாக பாஜக தலைமையிலான மோடி அரசு பெரும்பான்மை கூட்டணி இல்லாமல் நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளது. இந்நிலையில், எதிர்கட்சிகளுடன் ஆலோசனை செய்யாமல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம்பிர்லா சபாநாயகர் பதவிக்கு நிறுத்தப்பட்டுளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற “ஓம் பிர்லா” தற்போதைய சபாநாயகர் தேர்தலிலும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதனிடையே நாடாளுமன்ற மரபுப்படி மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவதாக இருந்தால் சபாநாயகர் தேர்தலில் ஆளுங்கட்சி முன்னிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என காங்கிரஸ் தலைவர் கார்கே, ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க ஒன்றிய அரசு மறுத்துள்ளதால் ஒன்றிய அரசின் தன்னிச்சையான முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இண்டியா கூட்டணி வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
மக்களவை சபாநாயகர் பதவிக்கு இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ்” களம் நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக கிளப்பிய இந்த சர்ச்சையில் அதவாது சுதந்திரத்திற்கு பிறகு இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்.பி. ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் மனுதாக்கலின் போது உடன் இருந்தனர்.
8-வது முறையாக மக்களவை தேர்தலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ