பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்..!! ஒரேநாளில் அதிரடி ஆய்வு..!!
இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.., இன்றைய நாளில் வீட்டில் மட்டுமின்றி பல்வேறு பொது இடங்களிலும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்..
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வதற்காக சில தடைகள் விதித்திருந்தது..
தீயணைப்புதுறை மற்றும் மின்வாரிய துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ்கள் கட்டாயம் வாங்கி வைத்திருக்க வேண்டும். சிலையின் உயரம் 10 அடி மட்டுமே இருக்க வேண்டும்., 10 அடிக்கு மேல் வைக்க அனுமதி கிடையாது மீறி வைத்தால் அபராதம் விதிக்கப்படும்..
குறிப்பாக இராசயனம் கலந்த விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி கிடையாது என அறிவுறுத்தியிருந்தது ஆனால் பலரும் அதை பொருட்படுத்தாமல் இராசயனம் கலந்த விநாயகர் சிலையை விற்பனை செய்வதாக செங்கல்பட்டு மாநகர காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது..
அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், காட்டாங்குளத்தூர் அருகே வட மாநிலத்தவர்கள் இரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் விற்பனை செய்ததால், செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி தலைமையிலான குழுவினர் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர்., அதில் இராசயனம் கலந்த 200 விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.. மேலும் இதுபோன்ற சிலைகளை மீண்டும் விற்பனை செய்ய அனுமதி கிடையாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..