வீட்டில் எந்த திசையில் தீபம் ஏற்றினால் பலன் கிடைக்கும்..? குழந்தை வரம் கிடைக்க பரிகாரம்..!!
காலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.., வீட்டில் எந்த திசையில் தீபம் ஏற்ற வேண்டும் எத்தனை முகங்கள் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும் என்பது பற்றி படிக்கலாம்..
வீட்டில் தீபம் ஏற்றும் போது கிழக்கு திசையை பார்த்தபடி ஏற்றி வைக்க வேண்டும்.., அப்படி செய்தால் வீட்டில் உள்ள துன்பங்கள் நீங்கி நன்மை பிறக்கும் என்பது ஐதீகம்..,
மேற்கு திசையை பார்த்தபடி தீபம் ஏற்றினால் வீட்டில் ஏற்படும் சண்டைகள் குறையும் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும் கடன் தொல்லைகள் குறையும்.., உறவுகள் வலுப்பெறும் என சொல்லுவார்கள்.
வடக்கு திசையை பார்த்த படி தீபம் ஏற்றினால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.., வடக்கு திசையில் தீபம் ஏற்றுவது என்பது வீட்டில் மட்டுமின்றி தொழில் செய்யும் இடத்திலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பண வரவு அதிகரிக்கும்.
தெற்கு திசையில் தீபம் ஏற்றுவதை தவிர்ப்பது நல்லது.., காரணம் தெற்கு திசையில் தீபம் ஏற்றினால் வீட்டில் கடன் அதிகரிக்கும். நம்மை பாவ செயலுக்கு உள்ளாக்கும் மற்றும் வீட்டில் சண்டைகள் அதிகரிக்க கூடும்..
ஒவ்வொரு திசையிலும் நாம் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பற்றி தெரிந்து வைத்துள்ளோமோ அதே அளவிற்கு தீபத்தில் எந்த திரியை கொண்டு ஏற்றுகிறோம் என்பது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பொதுவாகவே பலரும் எந்த வகை தீபம் ஏற்றினாலும் அதில் பஞ்சுத்திரி அல்லது நூல் திரி கொண்டு விளக்கு ஏற்றுவார்கள்.., பஞ்சுத்திரி வைத்து தீபம் ஏற்றினால் வீட்டில் சுபிக்ஷம் இருக்கும் என சொல்லுவார்கள்.
தாமாரை தண்டு திரியில் விளக்கு ஏற்றினால் நாம் கடந்த பிறவியில் செய்த பாவமும் சரி இந்த பிறவியில் செய்துள்ள பாவங்களும் சரி அனைத்தும் தீர்ந்துவிடும்..,
பாவங்கள் நீங்குவது மட்டுமின்றி வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
குழந்தை வரம் இல்லாமல் தவிக்கும் தம்பதியினர் வாழைத்தண்டில் திரியிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்
என சொல்கின்றனர் நம் முன்னோர்கள்.. மஞ்சள் திரி கொண்டு தீபம் ஏற்றினாலும் குழந்தை வரம் கிடைக்கும்.
நம்மை சுற்றியுள்ள கெடுதல்கள்.., நம்மை தொடரும் தீய சக்திகள் மற்றும் பில்லி சூனியம் போன்றவற்றில் இருந்து விடு பட வெள் எருக்கு பட்டை திரி கொண்டு தீபம் ஏற்றினால்
செய்வினைகள் முதல் அனைத்து கெடுதல்களும் நீங்கி விடும்.., முக்கியமாக விநாயகருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் இன்னும் சிறந்தது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..