இது எல்லாம் இவர் படமா..? கங்கை அமரனை மறந்த தமிழ் சினிமா..?
இசைஞானி இளையராஜாவின் உதவியாளராக பணியாற்றி வந்த கங்கை அமரன் சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களில் இசை அமைத்துள்ளார்..
இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் தங்கள் திறமையை வெளிகாட்டி சாதித்து இருக்கின்றனர்.., அதே சமயம் பலரும் தங்களுக்கு திறமை இருந்தும் அதில் சாதிக்க முடியாமல் இருக்கிறார்கள்.. அதில் ஒருவர் தான் “கங்கை அமரன்”
தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய இவரை பற்றி விரிவாக பார்க்கலாமா..?
ஒரு மனிதன் இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் இப்படி ஏதாவது ஒன்றில் சாதனை படைத்தாலே அவர்களை கொண்டாடி தீர்ப்போம். ஆனால், இவர் இந்த மூன்றிலுமே திறமை வாய்ந்தவர்.
தமிழ் சினிமாவில் மட்டும் ஏராளமான படங்களுக்கு இசையமைத்து பல பாடல்கள் ஹிட் ஆனது.. ஒரு சில படங்களை தாமே இயக்கியும் உள்ளார்.. சில படங்களில் கதாசிரியராகவும்.., பின்னணி பாடகர், மற்றும் குண சித்திர நடிகராகவும் நடித்து ஒரு பண்முக நடிகராக திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.
இசைஞானி இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன்.., இளையராஜாவின் மூலம் சினிமா உலகில் கால் பதித்தார் ஆனால் ஏனோ இன்று வரை அவரின் திறமை பலருக்கும் புரியவில்லை.
1977ம் ஆண்டு பாரதிராஜாவின் படைப்பில் வெளியான “16 வயதினிலே” படத்தில் வந்த “செந்தூரப் பூவே செந்தூரப் பூவே ஜில்லென்ற காற்றே...” என்ற பாடலுக்கு இவர்தான். இசை அமைத்திருப்பார்..

1980ம் ஆண்டு வெளியான ‘கோழி கூவுது‘ படத்திலும் சரி, 1990ம் ஆண்டு வெளியாகி 100 நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்ற “கரகாட்டக்காரன்” படமும் இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான்.
1970ம் ஆண்டு வெளியான பல படங்கள் இவர் இசையில் வெளியான பாடல்களே அன்று மட்டுமல்ல தற்போது கேட்டால் கூட மனதில் ஒரு புதுவித புத்துணர்ச்சி தூண்டும் விதமாக இவரது பாடல்கள் இருக்கும்.
கிழக்கே போகும் ரயில் படத்தில் வெளியான இந்த பாடல் “பூவரசம் பூ பூத்தாச்சி பொண்ணுக்கு தேதி வந்தாச்சி…” நடிகை ராதிகாவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு திருப்பு முனையாக மாறியது.
ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான “ஜானி” படத்தில் வரும் இந்த பாடல்.., “காற்றில் எந்தன் கீதம் காணாத உன்னை தேடுதே…” இந்த பாட்டில் பின்னணி பாடகியாக எஸ்.ஜானகி பாடி இருப்பார்.
நவரச நாயகன் கார்த்திக் மற்றும் ராதா அறிமுகமான படம் தான் “அலைகள் ஓய்வதில்லை” அதில் இடம்பெற்ற “புத்தம் புது காலை பொன்னிற வேளை…” இந்த பாடல் இன்றைய இளைஞர்கள் வரை ரசித்து கேட்க கூடிய ஒரு பாடல்..
“சின்னதம்பி” படத்தில் வெளியான “போ வோ மா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்...” இந்த பாடலும் இவர் இசையமைத்த பாடலே..
இவை எல்லாம் கங்கை அமரன் எழுதிய பாடல்களின் ஒரு பகுதி தான். ராமராஜனின் “கரகாட்டக்காரன்” விஜயகாந்தின் “அம்மன் கோவில் கிழக்காலே” போன்ற படங்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் இவர்தான் எழுதியுள்ளார்.
1977 துவங்கி 2கே கிட்ஸ் வரை பல பாடல்களை எழுதி இருப்பார் உதாரணத்திற்கு
“மங்காத்தா” படத்தில் ஹிட் ஆன விளையாடு மங்காத்தா பாடல்,
“கோவா” படத்தில் “இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உள்ளூறும் உணர்விது” என்ற பாடல்.
“சென்னை 28” படத்தில் வந்த “சரோஜா சாமா நிக்காலோ” என்ற பாடல் பல தலைமுறைகளை கடந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி கொடுத்தார்.., ஆனால் இந்த அனைத்து பாடல்களுக்கும் இசை அமைத்தவர் இசை அமைப்பாளர் “யுவன் சங்கர் ராஜா”..
பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் மட்டுமின்றி பாக்யராஜின் ஆரம்ப கால படங்களில் கங்கை அமரன் டப்பிங் குரல் கொடுத்திருப்பார்.
இது போலவே, “பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது…”, “வாடிப்பட்டி மாப்பிள்ள எனக்கு வாக்கப்பட்டு வாடி என நாக ரத்தினமே…” இது போன்ற பாடல்களை தாமே எழுதி பாடியும் இருப்பார்.
இப்படி தமிழ் சினிமாவில் அண்ணனின் உதவி மூலம் கால் பதித்த நம்ப இசை அமைப்பாளர் கங்கை அமரன்.., பல பாடல்கள், கதை, இசை அமைப்பாளர் என பன்முக மனிதராக சிறந்து விளங்கினார்.,
ஆனால் அவரால் ஒரு சில படங்களில் அவரின் திறமை பலருக்கும் பிடிக்கவில்லை.., ஆனால் இவரின் மகன்களான “வெங்கட் பிரபு” மற்றும் “பிரேம் ஜி” அதை பிரேக் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் மட்டும் 160க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசை அமைத்து இருப்பார்.., தேசிய விருது, தமிழக அரசு விருது என பல விருதுகள் இவர் பெற்றுள்ளார். குறிப்பாக ( ITFA ) விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
-லோகேஸ்வரி