“அர்த்தங்கள் சேர்ந்திடுதே வானம் நீயின்றி காய்ந்திடுதே…”
சில படத்தில் பாடல்கள் நல்ல இருக்கும், அப்படி பாடல் நல்ல இல்லை நா படம் நல்ல இருக்கும் ஆனால் ரெண்டுமே நல்ல இருக்குற மாதிரி ஒரு சில படங்கள் தான் இருக்கும். அந்த லிஸ்ட்ல இந்த படம் எப்போதுமே இருக்கும் காதல் பாடல் வேணுமா இருக்கு, காதல் தோல்வி பாடல் வேணுமா அதுவும் இருக்கு இப்படி இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிக்கும் படியாக இருப்பது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லலாம். இப்போ வரைக்கும் பலரின் காதலுக்கு உதவியதாக இருக்கும் பாடல்கள் இதோ.
எல்லாருக்கும் அவங்க லவ் பன்ற பொண்ணு எப்பொழுதும் அழகுதான், அதிலும் முதல் காதல் எப்பொழுதும் ஸ்பெஷல். நீங்க உங்க காதலியை பார்த்து இந்த டயலாக் சொல்லிருக்கீங்களா..? ஹாய், “நீ எவ்வளவு அழகுனு வார்த்தையால சொல்லவே முடியாது, அதுனால நன் உன்னை லவ் பன்றேன்” என்ன பிரெண்ட்ஸ் நீங்களும் உங்க காதலியை இப்படி எல்லாம் சொல்லி லவ் பன்னிருக்கிங்களா.இத்தனை நாட்களாக உன்னை பார்க்காமல் எங்குதான் போனேனோ, நாட்கள் எல்லாம் வீணாக போய்விட்டது.இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடகர்கள் பிரசாந்தினி,நரேஷ் ஐயர் பாடிய பாடல் இது.
முன்தினம்
பார்த்தேனே பார்த்ததும்
தோற்றேனே சல்லடைக்
கண்ணாக நெஞ்சமும்
புண்ணானதே………
உலகம் சுருங்கி நம் இருவரில் அடங்குதே,முதலும் முடிவும் நீ என தெரிந்த பிறகும் மனம் தயங்குவது ஏனோ தெரியவில்லை, அழகின் சிகரம் நீயாக இருப்பதினால், உன்னை விட்டு கொஞ்சம் தள்ளி நடத்தேன் இந்தப்பாடலுக்கும் இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடகர்கள் பென்னி டயல் , கிரிஷ் ,ஸ்ருதி ஹாசன், சேர்ந்து பாடிய பாடல் .
உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம் என் மாலை
வானம் நீயின்றி காய்ந்திடுதே……
ஒரு கிளியானது அனலாக இருக்கும் பொழுது பனி பொழிவினை தேடி செல்லும் அதைப்போலத்தான் மரங்களும் மழை துளிகளை தேடி ஏங்கும், கனவில் பலமுறை சந்தித்து விட்டோம் அந்தி மாலை பொழுதினில் நம் பேசியது உனக்கு நினைவிருக்கிறதா?இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடகி சுதா ரகுநாதன் பாடிய பாடல் இது.
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி……..
நீ என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாய், உன் நினைப்பினால் தினம் தினம் செத்து கொண்டு இருக்கிறேன், என் நெஞ்சை கொஞ்சம் கொஞ்சமாக பிச்சு தின்னு கொண்டு இருக்கிறாய் , இந்த பாடலை கேட்கும் பொழுது காதல் தோல்வி பாடலா இல்லை குத்து பாடலா என யோசிக்கும் அளவிற்கு இருக்கும். இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடகர் கார்த்திக் பாடிய பாடல் இது.
ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போனா மண்ணா….
இந்த மாதிரி படத்தில் உங்களுக்கு பிடித்த படங்கள் என்னவா இருக்கும் அப்படினு சொல்லுங்க…
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..