பூரி செய்யும்போது இத மட்டும் சேர்த்து விடாதீங்க..!
வறுக்கும் மீனில் எலுமிச்சை சாறு அதிகமாக சேர்க்காமல் இருந்தால் அது கல்லில் ஒட்டாமல் வரும்.
பிரியாணியை தம் போடுவதற்கு ஒரு தட்டில் நெய் தடவி பிரியாணியை நன்றாக மூடி தம் போட வேண்டும்.
பாயாசத்தை இறக்கிய பிறகு தான் சர்க்கரையை சேர்க்க வேண்டும் அப்போது தான் சுவை அதிகமாகும்.
பொங்கலுக்கு பாசிப்பருப்பை வறுத்தப் பின் வேகவைத்தால் வாசனையாக இருக்கும்.
குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் தேங்காய் அரைத்து ஊற்றி எலுமிச்சை பிழிந்து விடலாம்.
கூட்டு, பொரிச்ச குழம்பு ஆகியவற்றிற்கு இறக்கியபின் தாளித்தால் தான் சுவை அதிகமாகும்.
தோசைக்கு மாவில் நீர் சேர்ப்பதற்கு பதில் மோர் சேர்த்து கலக்க நல்லா சுவையாக இருக்கும்.
குலோப்ஜாமுன் செய்ய உருட்டியதும் ஒரு முனைகளில் துளை போட்டு வேகவைத்தால் நன்றாக வெந்துவிடும். பாகிலும் முழுவதுமாக ஊறும்.
காய்கறி சாலட் செய்ய அதில் ஊறவைத்த பச்சை பயிறை சேர்த்து சமைக்கலாம்.
பூரி மாவில் நெய் சேர்த்து பிசையக் கூடாது, அப்படி செய்தால் பூரி தூளாக உடைந்து விடும்.
போலி தட்டும்போது வாழை இலையின் பின்பக்கம் தட்டினால் மெல்லியதாக வரும்.