வீட்டுக் குறிப்புகள்..!
வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனை உளுத்தம் மாவில் சேர்த்து கலந்து மெதுவடை செய்ய வடை மொறுமொறுப்பாகவும் எண்ணெய் குடிக்காமலும் இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் முருங்கை பூவை சேர்த்து வதக்கி மோர்குழம்பில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால் மோர்குழம்பு ருசியாக இருக்கும்.
கேக் வேகவைக்கும்போது அதன் மேல் பிரவுன் பேப்பர் போட்டு மூடி வேகவைத்தால் கேக்கின் மேம் ஆடை படியாமல் இருக்கும்.
தேங்காய் உடைத்ததும் அதில் கண் உள்ள பாகத்தை முதலில் பயன்படுத்த வேண்டும், காரணம் அந்த பகுதி தான் விரைவில் கெட்டுபோகும்.
பருப்பு உருண்டை குழம்பில் தேங்காய் அரைத்து சேர்ப்பதற்கு பதில் தேங்காய் பால் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட கொடுத்து வர உடலில் ஆற்றல் அதிகமாக கிடைக்கும்.
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்யும்போது அதில் கடைசியாக இறக்கும்போது சிறிது கொத்தமல்லி தூள் சேர்த்து இறக்கினால் குழம்பு சுவையாக இருக்கும்.